Friday, January 3, 2014

விமான நிலையத்தின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் தடுப்பைத் தாண்டி நுழைந்த வீடற்ற நபரொருவர் அப்போதே தரையிறங்கிய விமானத்தை நோக்கி ஓடி வந்து அதன் எஞ்சினை தாக்கிய சம்பவம் ஒன்று அமெரிக்காவின் நியூ ஜேர்ஸி மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.



இச்சம்பவம் கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று நியூ ஜேர்ஸியிலுள்ள பீனிக்ஸ் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

ரொபேர்ட் எட்வேர்ட் என்ற 49 வயதான நபரே விமான நிலையத்தினுள் மாலை வேளையில் புகுந்து சௌத்வெஸ்ட் எயார்லைன்ஸ் விமானத்தின் எஞ்சின் பகுதியை கைகளினால் தாக்கியுள்ளார் என பீனிக்ஸ் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் நுழைவு குறித்து விமானிக்கு எச்சரிக்கை செய்து விமானத்தின் எஞ்சினையும் நிறுத்துமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்போது பயணிகள் விமானத்தில் இருந்தபோதிலும் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மது மற்றும் போதைப் பொருள் பாவனையில் ரொபர்ட் இருந்தமைக்கான அறிகுறிகள் தென்பட்டது. அவர் மீது அநாகரீமாக நடந்துகொண்டமை மற்றும் தடைவிதிக்கப்பட்ட பகுதியில் நுழைந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என பொலிஸ் பேச்சாளர் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search