Wednesday, January 8, 2014


சவூதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களாக தொழில் புரிந்து வருவோரால் சவூதியில் உள்ள அவர்களின் அனுசரணையாளர்களுக்கு எதிராக தினமும் மூன்று முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுவருவதாக இலங்கை தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரேபிய நியூஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து தொழில் விவகாரங்களுக்கான இலங்கைத் தூதரக பிரதிநிதி எம்.பி. எம். ஸாருக் தெரிவித்துள்ளதாவது,

தங்களுக்குக் கிடைத்துவரும் முறைப்பாடுகளுள் அநேகமானவை சம்பளக் கொடுப்பனவுகள் வழங்கப்படாமை, வீட்டுப் பணியாளர்களின் சம்மதமின்றி அவர்களின் சேவை ஒப்பந்தங்களை புதுப்பித்தல் மற்றும் அடி, உதைகள் உள்ளிட்ட சரீர சம்பந்தமான துஷ்பிரயோகங்கள் அடங்குவதாகவும் கடந்த வருடத்தில் இலங்கையைச் சேர்ந்த 50வீட்டுப்பணியாளர்கள் பணியிடங்களிலிருந்து தப்பித்துச் செல்ல முற்பட்டதாகவும் பெண் தொழிலாளர்கள் மத்தியில் இடம்பெற்றுவரும் பாலியல் தொந்தரவுகள் குறித்த தகவல் மிகவும் அரிதாகவே வெளி வருவதாகவும் 1000 தொழிலாளர்களிலும் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted by V4Tamil .com on 9:27 PM  No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search