Wednesday, January 8, 2014

நீண்ட இடைவேளைக்கு பின்னர் சிம்பு மீண்டும் நயன் தாராவுடன் இணைந்து நடிக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்திதான். இந்த படத்தை சிம்புவின் குடும்ப நிறுவனம்தான் தயாரிக்கிறது. சிம்புவின் தம்பி குறளரசன் இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுக ஆகிறார்.



சிம்பு, நயன் தாரா இருவரும் இணைந்து ஏழு வருடங்களுக்கு முன் வல்லவன் என்ற படத்தில்தான் கடைசியாக நடித்தனர். அதன்பின்னர் அவர்களுடைய வாழ்வில் பல திருப்பங்கள் ஏற்பட்டு தற்போது மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.


பாண்டிராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நேற்று சென்னையில் நடந்தது. நயன் தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. சிம்புவுக்கு நேற்று காட்சிகள் எதுவும் இல்லையென்றாலும் தயாரிப்பாளர் என்ற முறையில் படப்பிடிப்புக்கு வந்திருந்தாராம். இதனால் நயன் தாராவுக்கு டென்ஷன் எகிறியுள்ளது.


உடனே இயக்குனர் பாண்டிராஜை கூப்பிட்டு படப்பிடிப்புக்கு சம்மந்தம் இல்லாதவர்களை முதலில் வெளியேற்றுங்கள். அப்போதுதான் படப்பிடிப்பு நடக்கும், அல்லது நான் வெளியேற வேண்டியநிலை இருக்கும் என கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நான் படத்தின் தயாரிப்பாளர் நான் ஏன் வெளியேற வேண்டும் என சிம்புவும் பதிலுக்கு எகிற பிரச்சனை பெரிதாவதை கண்டு டி.ராஜேந்தருக்கு போன் செய்துள்ளார் பாண்டிராஜ். அதன்பின்னர் சிம்பு வெளியேற படப்பிடிப்பு தொடர்ந்து நடந்ததாம். இந்த சம்பவம் கோலிவுட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Posted by V4Tamil .com on 10:37 PM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search