Wednesday, January 8, 2014

யாழ். மீசாலை ஆசைப்பிள்ளை ஏற்றத்திற்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 52 ஆவது படைப்பிரிவின் தலைமையாகத்தை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று (08) மதியம் திறந்து வைத்தார். 


இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, இராணுவ தளபதி ஆர்.எம்.தயா ரத்னாயக்க, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உள்ளிட்ட பல இராணுவ உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

அதேவேளை தலைமையாக திறப்பு விழாவுக்கு முன்னதாக யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், 

கடந்த 1995 ம் ஆண்டு நாம் விடுதலைப்புலிகளிடம் இருந்து யாழ் குடாநாட்டை மீட்டிருந்தோம். அவ்வேளையில் விடுதலைப்புலிகளின் பயன்பாட்டில் இருந்த காணிகள் வீடுகளையே இராணுவமும் பயன்பாட்டுக்கு எடுத்து கொண்டது. 

தற்போது யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து பொது மக்களின் காணிகள் வீடுகளில் நிலை கொண்டிருந்த இராணுவம் கட்டம் கட்டமாக வெளியேறி அரச காணிகளில் முகாம் அமைத்து நிலைகொண்டுள்ளார்கள். 

அவ்வாறு வரணி பகுதியில் தனியார் காணியில் நிலை கொண்டிருந்த இராணுவமே தற்போது அதனை உரிமையாளர்களிடம் கையளித்துவிட்டு இங்கு அரச காணியில் புதிய முகாம் அமைத்துள்ளோம். 

அதேபோல ஏனைய இடங்களில் தனியார் காணிகளில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு அரச காணிகளில் முகாம் அமைப்பதன் மூலம் கூடிய விரைவில் அந்த காணிகளும் உரியவர்களிடம் கையளிக்கப்படும் என தெரிவித்தார். 

Posted by V4Tamil .com on 7:58 PM  No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search