Wednesday, January 8, 2014

சமையலுக்காக சந்தையில் கொள்வனவு செய்யப்பட்ட மீன் ஒன்றின் வயிற்றில் இருந்து பாம்பு ஒன்று இருந்த சம்பவம் வாழைச்சேனை பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 
வாழைச்சேனை 5 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் ஏ.எம் வலிஹான என்பவர் செப்பலி வகை மீன் ஒன்றினை சந்தையில் வாங்கிச் சென்றுள்ளார். அவரது மனைவி சமையலுக்காக மீனை வெட்டியபோது மீனுக்குள் இருந்து ஒன்றரை அடி நீளமான பாம்பு ஒன்று இருந்துள்ளதைக் கண்டுள்ளார்.
 
இச்சம்பவத்தை பார்வையிட வந்த பிரதேச மீனவர்கள் மாரி காலங்களில் செப்பலி,கொய்,கொடுவா போன்ற மீன் இனங்கள் நீர்பாம்புகளை பிடித்துண்ணும் பழக்கம் கொண்டவை எனத் தெரிவித்தனர்.
 
அண்மையில் வாழைச்சேனையிலுள்ள பிரிதொரு வீட்டினுள் சமையலுக்காக அறுக்கப்பட்ட கொய் வகை மீனிலிருந்து புளுக்கள் வெளியாகியுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Posted by V4Tamil .com on 8:07 PM  No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search