கமல்-விஸ்வரூபம்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் இந்த ஆண்டில் வெளிவரவில்லை. கலைஞானி கமலஹாசனின் ‘விஸ்வரூபம்’ படம் பல்வேறு தடைகளுக்கு பின் வெளியான வசூலில் அபார சாதனை படைத்து அவரின் விஸ்வரூபத்தை பறை சாற்றியது.
சூர்யா-சூப்பர்
கமல், ரஜினி ஆகியோருக்கு அடுத்த தலைமுறை நடிகர்களில் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரில் பெண்களை அதிக அளவு ரசிகர்களாக கொண்டிருக்கும் சூர்யாவுக்கு இந்த வருடம் சூப்பரான வருடம் என்றே கூறவேண்டும். இவரது ‘சிங்கம்-2’ அதிக வசூலை குவித்து மிகப்பெரிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
அஜீத்-அபாரம்
அஜீத் நடிப்பில் ஊழல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு வெளிவந்த ‘ஆரம்பம்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக வெளிநாடுகளில் ‘எந்திரன்’ மற்றும் ‘விஸ்வரூபம்’, ‘சிவாஜி’ மற்றும் ‘தசாவதாரம்’ ஆகிய படங்களுக்கு அடுத்தபடியாக 2.5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி சாதனை படைத்தது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 60 கோடிக்கு மேல் வசூலை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா-ஆச்சரியம்
ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல் மற்ற நடிகர்களோடு இணைந்து நடித்து தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவரும் ஆர்யா 2013-ம் வருடத்தில் ஆச்சரியமான நடிகராகதான் தெரிகிறார். அஜித்துடன் இணைந்து ‘ஆரம்பம்’, ஜெய் உடன் இணைந்து ‘ராஜா ராணி’ ஆகிய படங்களில் நடித்து ஸ்கோர் செய்த ஆர்யாவுக்கு ‘இரண்டாம் உலகம்’ மட்டுமே சற்று சரிவை கொடுத்துள்ளது.
விஜய்-சுமார்
அஜித்துக்கு போட்டியாக கருதப்படும் விஜய்யின் ‘தலைவா’ படமும் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது. இந்த ஆண்டை பொறுத்தவரை விஜய்க்கு சற்று இறங்குமுகம் என்றே சொல்லவேண்டும்.
விஷால்-துடிப்பு
தனது துடிப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்த விஷாலுக்கு தொடர் தோல்விக்கு பின் சுமாராக ஒடிய ‘பட்டத்து யானை’ மற்றும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ‘பாண்டிய நாடு’ ஆகிய படங்கள் அவருக்கு மறுபடியும் உற்சாகத்தை வரவழைத்துள்ளது. அதே உற்சாகத்தோடு பல்வேறு படங்களில் சுறுசுறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
விக்ரம்-வீழ்ச்சி
தனது நடிப்பாற்றலால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ள சீயான் விக்ரமிற்கு இந்த ஆண்டு வீழ்ச்சி என்று தான் சொல்லவேண்டும். இந்த ஆண்டு வெளிவந்த ‘டேவிட்’ படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாதததே அதற்கு முக்கிய காரணம்.
இளம் நடிகர்களில் சிம்புவின் படம் எதுவும் இந்த ஆண்டில் வெளிவரவில்லை.
தனுஷ்-சரிவு
தனுஷ் நடிப்பில் இந்தியில் வெளியாகி பெரும்வெற்றி பெற்ற ‘ராஞ்சனா’ படம் தமிழில் பொழிமாற்றம் செய்யப்பட்டது. இப்படத்திற்கு தமிழகத்தில் பெரிய வரவேற்பில்லாமல் போனது. தனுஷின் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ‘மரியான்’ படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற முடியவில்லை. ‘நய்யாண்டி’ படம் மட்டுமே சுமாரான வெற்றியை பெற்றது.
புதுமுகங்களில் புகழ் பெற்றவர்கள்
இந்த ஆண்டில் புதுமுக நடிகரான சிவகார்த்திகேயனுககு ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து, தயாரிப்பாளர்களின் நடிகராக அவதாரமெடுத்திருக்கிறார். தற்போது ஹன்சிகாவுடன் இணைந்து ‘மான் கராத்தே’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சுமார் மூஞ்சி குமாரான விஜய் சேதுபதி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தனது திறமையான நடிப்பினால் சூப்பர் நடிப்பு குமாராக வலம் வருகிறார்.
குணச்சித்திர வேடங்களில் கலக்கிய சத்யராஜ் மற்றும் பார்த்திபன்
கடந்த காலங்களில் மிகப்பெரிய ஹீரோவாக வலம் வந்த சத்யராஜ் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கிவருகிறார். ‘தலைவா’, ‘ராஜா ராணி’ மற்றும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆகிய படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் தனக்குரிய இடத்தை தக்கவைத்து கொண்டிருக்கிறார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு கரு.பழனியப்பனின் ‘ஜன்னல் ஓரம்’ படத்தில் நடித்த பார்த்திபன் தனது நக்கல் நடிப்பை மறுபடியும் ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்திருக்கிறார். வருங்காலங்களிலும் தங்களது வித்தியாசமான நடிப்பின் மூலம் இவர்கள் இருவரும் ரசிகர்களை மகிழ்விப்பார்கள் என்று நம்புவோம்.
Thursday, January 2, 2014
Search
Popular Posts
-
களிகை G.ஜெயசீலன் வழங்க ஜெனி பவர்புல் மீடியா படநிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கும் படம் “அதுவேற இதுவேற”.இதில் நாயகனாக வர்ஷனும், கதாந...
-
சமீபத்தில் வெளிவந்த 'என்றென்றும் புன்னகை' படமானது மிகவும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆகவே இந்த படத்தின் வெற்றிக் கொண்டாட்டமானது...
-
ஆந்திர மாநிலத்தில் ராஜமுந்திரியில் கலாமந்திர் என்ற ஜவுளிக்கடையை திறக்க நேற்று அனுஷ்கா மற்றும் ப்ரணீதா ஆகிய இரண்டு நடிகைகளும் வந்ததால் பெரும்...
-
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா வலுவான தொடக்கத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே ஆட்டம் ம...
-
இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணிக்கு டெஸ்ட் ...
-
பூமியில் வாழும் விலங்குகளில் மிகவும் புத்திசாலியான விலங்கு யானை ஆகும். சிங்கம் காட்டுக்கு ராஜாவாக இருந்த போதிலும் யானையைப் போன்று துணிச்சலான...
-
The Baatara Gorge Waterfall (or the Baatara Pothole Waterfall) is located in the village of Balaa, between the cities of Laqlouq and Tannour...
-
உலகம் முழுவதும் உள்ள இளைய மற்றும் அனுபவம் வாய்ந்த ஆயிரக்கணக் கான வீர, வீராங்கனைகளது ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் வருடமாக 2014 அமையவுள்ளது. இ...
-
சரத்குமார் நடிக்கும் நறுமுகை என்ற திரைப்படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. அவருடன் அர்ஜுன்பால், இஷிதா, நிகிதா என்ற நியூபேஸ்களும் நடி...
-
துப்பாக்கி படத்தை மும்பையில் படமாக்கிய முருகதாஸ் அடுத்த படத்துக்கு லொகேஷனை மாற்றிவிட்டார். விஜய் நடித்த துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முரு...
Powered by Blogger.
Blog Archive
-
▼
2014
(89)
-
▼
January
(89)
- 112 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்விளக்கு
- அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இன்று பாரிய ஆர்ப்பா...
- மல்லாகம் நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடத் தொகுதி இ...
- விமானத்தில் குழந்தையை அடித்த பிரபல நிறுவனத் தலைவரு...
- ஓய்வூதியப் பணத்தைப் பெறுவதற்காக இறந்த தாயின் ...
- சிலை ஆகிப்போன சோனியா வெண்கலச் சிலை தயார்.
- ஆம் ஆத்மி கட்சியில் சேர நடிகர் விஜய்க்கு அழைப்பு
- பெண்களை அடித்தால் தெய்வத்தைக் காயப்படுத்துகிறீர்கள...
- இந்தக் கேவலம் தேவையா இந்த மராத்தி மொழி நாயகிக்கு.....
- வட மாகாண சபையின் படைக்கலச்சேவிதர் அவையில் மயங்கி ...
- கவர்ச்சிக்கு மாறுகிறார் களவாணி ஓவியா
- காட்டில் செய்கை பண்ணப்பட்ட 70 கஞ்சா மரங்கள் கைப்ப...
- சூரியனை சுற்றிவரும் இந்த விண்பாறை மிக அபாயகரமானது
- நயன் - சிம்பு முறுகல், படப்பிடிப்பில் பரபரப்பு
- என் பிறந்தநாள் பார்ட்டிக்கு வீட்டில் சாப்பிட்டுவிட...
- சீனத்து மருத்துவ சாதனை...
- பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முய...
- இலங்கை மனித உரிமை நிலவரம்: அமெரிக்கா "தொடர்ந்து கவலை"
- சவூதியில் பாலியல் தொந்தரவுகள் - இலங்கைத் தூதரகம் அ...
- த்ரிஷாவிற்கும், அவரது அம்மா உமா கிருஷ்ணனுக்கும் பி...
- சிங்கப்பூர் இந்தியருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆ...
- லஞ்சம் கேட்டா 011- 27357169 கால் பண்ணுங்க... டெல்ல...
- இயக்குனர் ஷங்கரின் முதல்வனும், டெல்லி முதல்வர் கெஜ...
- மீனின் வயிற்றுக்குள் பாம்பு: வாழைச்சேனையில் பரபரப்பு
- 3 வகையான குண்டுகளை படையினர் பயன்படுத்தினர்: ரெப்பி...
- பொது மக்கள் காணிகளில் நிலை கொண்டிருந்த இராணுவம் கட...
- காணாமற்போனோர் பற்றிய தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க...
- காணாமற்போனோர் பற்றிய தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க...
- என்னை கொலை செய்வார்களோ தெரியவில்லை - மன்னார் ஆயர்
- சவுதியில் விமானத்தோடு பறந்த உடல் உறுப்புகள்
- ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் - சிறப்பு...
- வீம்புக்காக எதையாவது வித்தியாசமாக செய்வது மன்சூரலி...
- கம்பியூட்டரில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்....!
- பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் விஜய் நடிக்க இருப்பத...
- டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 2–வது இடம்: ஆஸ்திரேல...
- குண்டு சட்டிக்குள் தொடரும் சாதனை...
- சம்பளம் நான் வாங்கும்போது எனக்காக இன்னொருவர் ரிஸ்க...
- டெல்லி விமான நிலைய ஓடுதளங்களிலும் அடர்ந்த பனி மூட்டம்
- இந்திய - இலங்கை மகளிர் ஓவர் கிரிக்கட் தொடர்ந்தும் ...
- 2014 இல் உலகை அலங்கரிக்கும் விளையாட்டு விழாக்கள்
- தெல்லிப்பழையில் விநோத முகத்துடன் ஆட்டுக்குட்டி
- வீரத்தை தொடர்ந்து பட வாய்ப்புக்களை கோரியுள்ள தமன்னா
- அதிக சம்பளம், லேடி ககாவை முந்தினார் மடோனா
- தெலுங்கு நடிகர் உதய் கிரண் நேற்றிரவு தூக்கு இட்டுத...
- சசிக்குமார் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவி...
- உரையாடுபவரின் முப்பரிமாணத் தோற்றத்தை காட்சிப்படுத்...
- இயக்குனர் சுந்தர்.சி அஜித்திற்காக ஒரு கதையை தயார் ...
- வில்லன்களுடன் மோதி, துவம்சம் செய்யும் காட்சி - ஆவே...
- ‘வீரம்' திரைப்படம், தெலுங்கில் "வீருடொக்கடே"என்ற ப...
- காதல் என்ற ஒன்று பெண்ணுக்குள் வந்துவிட்டால்....
- ரஜினிக்கு எதிராகப் பேசியதாக வதந்தி பரப்பிட்டாய்ங்க...
- இலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் சமநிலையில் நிறைவு
- மான் கராத்தேப் படங்கள்.....
- 2013-ல் உலக கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு 3.7 ட்ரில...
- மச் மச்சான்ஸ் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்....
- நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி பெயரில் போலி ஃபேஸ்பு...
- 'உலகின் மிகப் பெரிய வானவேடிக்கை காட்சி' : புதிய உல...
- தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து விமானத்தை தாக்...
- இந்தியாவை கலக்க வரும் "POLITICS OF LOVE"
- நடிகர் ஜான் ஆபிரகாம் தனது காதலி பிரியா ருன்சலை திர...
- சிம்புவுடன் முத்த காட்சியில் நடிக்க ரூ.50 லட்சம் க...
- ஆசஷ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியா 326 ரன்னில் சுருண்டது
- ஸ்கை ட்ரைவ் எப்பவுமே அப்படித்தான்....!
- கோமாவில் ஷூமேக்கர்... இன்று 45வது பிறந்த நாள்.. கு...
- நான்கே நான்கு நிமிடங்களில் 2013-ஐ மீண்டும் பார்க்க...
- ஜில்லா பட பேனர்களை வைக்க பொலிசார் தடை விஜய் ரசிகர்...
- மனைவிக்கும் மருமகனுக்கும் மணம் முடித்துவைத்த மாமா ...
- இப்படிக்கூட ஒரு ஹீரோயின் இருப்பாரா? புது இயக்குநர்...
- முள் படுக்கையில் தவம்: சாமியார் முன் குவியும் பக்த...
- இலங்கை அணியில் பாரிய மாற்றங்களுக்கான வாய்ப்பு?
- ‘மகாபலிபுரம்’ படத்திற்காக புத்தாண்டு பாடல் ஒன்றை ப...
- மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்!!!
- இந்தியாவை கலக்க வருகிறது பாலிக்டிக்ஸ் ஆப் லவ் திரை...
- ஜில்லா நல்லா விக்குது போங்க...
- ஜைஹிந்த் 2 முன்னோட்டம்..
- என்னை மீறி ஜீன்ஸ் படத்தை யாரும் 2வது பாகமாக எடுக்க...
- சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்
- ஒவ்வொருவரிடம் இருந்தும் வித்தியாசமான விஷயங்களை தேட...
- நமக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை...தேவையா இது
- உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த துவிச்சக்கரவண்டி
- 2013 இல் திரையுலக நாயகர்கள் யார் எங்கே....
- இரண்டு மாதமாக என் படுக்கையறையில் மெத்தையில் அந்த ப...
- ஆசஷ் கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்: ஒயிட்வாஷ் நிலையில...
- சில நிமிடங்களில் புத்தாண்டு துவங்கியதால் ஓராண்டு த...
- அனிருத்தை மையப்படுத்தும் ஆக்கோ
- அதிவேக சதம் மட்டுமின்றி மேலும் சில சாதனைகளையும் நி...
- தனது புது வருடக் கொண்டாட்டம் சென்னையில்தான் - ஸ்ரு...
- அஜித் , தம்னா நடிக்கும் ''வீரம் '' பட டீஸர்...
- குறைந்த பந்துகளில் சதம் அடித்து கோரி ஆண்டர்சன் உலக...
-
▼
January
(89)
Advertising

Social Icons
Featured Posts
*
0 comments:
Post a Comment