Sunday, January 5, 2014


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான விளங்கும் நயன்தாரா கராத்தே பயிற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.மலையாள நடிகையான நயன்தாரா தமிழில் சரத்குமார் நடித்த 'ஐயா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார், பின்னர் சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக சந்திரமுகியில் நடித்தார்.தனது குடும்பப் பாங்கான நடிப்பில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நயன்தாரா, பின்னர் தனுஷின் 'யாரடி நீ மோகினி' திரைப்படத்தில் நடித்த அவருக்கு அது பெரிய வெற்றியை தந்தது.

அன்றிலிருந்து இன்றுவரை காதல் நாயகியாக நீண்டகாலம் வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா, தற்போது ஆக்சனுக்கு மாறியுள்ளார்.
அண்மையில் வெளியான, 'ராஜாராணி', 'ஆரம்பம்' திரைப்படங்களில், அசத்தலாக நடித்த அவர், தற்போது வித்யா பாலன் நடித்த, 'கஹானி' திரைப்படத்தின் ரீ-மேக்கான, 'அனாமிகா'வில் நடிக்கவிருக்கிறார்.'அனாமிகா' முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படம் என்பதால் முதன் முறையாக, ஆக்சன் நாயகியாக அவதரித்துள்ளார் நயன்தாரா. 'அனாமிகா'வை தொடர்ந்து, 'ஜெயம்' ரவியுடன் ஜோடி சேரவுள்ளார், அந்த திரைப்படத்திலும் ஆக்சன் ரோல் தானாம்.அதாவது, கராத்தே மாஸ்டராக நடிக்கும் நயனுக்கு, ஹீரோவுக்கு இணையான வெயிட்டான வேடமாம். இதற்காக, சில மாதங்களாக கராத்தே பயிற்சியில் தீவிரமாக இருந்து வருகிறாராம் நயன்தாரா.
மேலும் வில்லன்களுடன் மோதி, துவம்சம் செய்யும் காட்சியிலும், ஆவேசமாக நடித்து, கைதட்டல் வாங்கியுள்ளாராம்.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search