
கடந்த வருடம் அமெரிக்காவை சேர்ந்த
Jessica Bennett என்ற பெண் தனது 19மாத Jonah என்ற கைக்குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்தார். விமான பயணம் செய்துகொண்டிருந்தபோது குழந்தை Jonah திடீரென அழுக ஆரம்பித்தது. இதனால் அருகில் தூங்கிக்கொண்டிருந்த Joe Rickey Hundley என்பவர் குழந்தை அழுகை சத்தத்தால் எரிச்சல் அடைந்து ஆத்திரத்தில் குழந்தையை அடித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த Jessica Bennett விமான ஊழியர்களிடம் புகார் கூறினார்.

விமானம் தரையிறங்கியவுடன் Jessica
Bennett, காவல்நிலையத்தில் Joe Rickey Hundley மீது புகார் அளித்தார். அவருடைய புகாரின்பேரில் Joe Rickey Hundleyமீது போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த ஒரு வருடமாக அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வந்தது. Joe Rickey Hundley தனது தவறை ஒப்புக்கொண்டு தான் செய்த செயலுக்காக வருந்துவதாக நீதிபதியிடம் கூறினார்.
இருப்பினும் அவருக்கு நீதிபதி 8 மாத சிறைதண்டனை கொடுத்து நேற்று தீர்ப்பு அளித்தார். அந்த சம்பவத்தின்போது தனது குழந்தை மிகவும் பயந்துவிட்டதாகவும், இதுபோன்ற பொறுப்பற்றவர்களுக்கு இந்த தண்டனை அவசியம்தான் என்றும் தீர்ப்பு வெளியானவுடன் குழந்தையின் தாயார் Jessica Bennett செய்தியாளர்களிடம் கூறினார். தண்டனை பெற்ற Joe Rickey Hundley என்பவர் Unitech Composites and Structures, என்ற நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment