Sunday, December 29, 2013

ஆம். நம்பமுடியாவிட்டாலும் உண்மைதான். ஆனால் இங்கல்ல. நமது அயலவர்களிடம். பூமியின் விண்வெளி அயலவர்களான யுரேனஸ் மற்றும் நெப்டியூனில், பூமியின் அனைத்து நகைக்கடைகளில் உள்ளவற்றிலும் பார்க்க அதிகளவான வைரங்கள் உண்டு. அந்த இரு கிரகங்களிலும் வைரங்கள் வளிமண்டலத்திலிருந்து இருந்து மழைத்துளியைப் போல் விழும் என்ற கோட்பாடு உள்ளது.

யுரேனஸ் மற்றும் நெப்டியூனில் உயர் விகிதத்தில் மீத்தேன் (methane) உள்ளது. இந்த கிரகங்களில் காணப்படும் உயர் வெப்பநிலை மற்றும் அழுத்தம் காரணமாக இது வைரம் அல்லது சிக்கலான ஆர்கானிக் உட்பொருட்களாக மாறிவிடுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  ஆராய்ச்சி  முடிவுகள், அமுக்கம் 19 GPa ஆகவும் வெப்பநிலை 2200 முதல் 3000 டிகிரி கெல்வின் ஆகவுமுள்ள நிலையில் மீத்தேன் வைரமாக மாற்றமடைவதாக கூறுகின்றன. மீத்தேனை வைரமாக மாற்றுவதில் முதன்மைக் காரணியாக வெப்பநிலை உள்ளபோதிலும் வளிமண்டல அழுத்தத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வைரங்கள் விழுவதால் வெளியிடப்படும் சக்தி நெப்டியூனின் காந்தசக்தியை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. இதனால் இக்கிரகத்தின் வெப்பக் கதிர்வீச்சும் அதிகரிக்கும். வைர மழை ஒரு நிரூபிக்கப்பட்ட நிகழ்வு இல்லை என்றாலும், இதற்குரிய சாத்தியங்களும் இருப்பதாக வாதங்கள் உள்ளன.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search