Friday, August 16, 2013

celkon-mobile-cup-20131 copyகரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டிகளின் இறுதிப்போட்டிகள் நாளை 17.08.2013 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இப்போட்டிகள் கரவெட்டி ஞானாசாரியார் கல்லுாரி மைதானத்தில் பிற்பகல் 1.00 க்கு ஆரம்பமாகும்.

இச்சுற்றுப் போட்டிகள் 5 ஓவர்கள், மற்றும் 10 ஒவர்கள் கொண்ட பிரிவுகளாக  நடைபெற்றிருந்தன.

அதனடிப்படையில் நாளைய இறுதிப்போட்டிகளின் முதலாவது போட்டி 5 ஓவர்கள் பிரிவுக்கானதாக இடம்பெறும். இதில் மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து வதிரி ஞானவைரவர் விளையாட்டுக் கழக அணி விளையாடவுள்ளது.

தொடர்ந்து இடம்பெறும் 10 ஓவர்கள் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகு விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து கரவெட்டி ஐங்கரா விளையாட்டுக்கழக அணி விளையாடவுள்ளது.

இவ்விரு இறுதிப்போட்டிகளிலும் விளையாடவுள்ள நான்கு அணிகளும் வடமராட்சியின் பலம்பொருந்திய அணிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search