
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) எதிர்கால போட்டி அட்டவணைப்படி, இந்திய அணி, வரும் 2014 பெப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நியூசிலாந்து சென்று, மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு ரி-ருவென்டி போட்டியில் பங்கேற்க வேண்டும்.
ஆனால் ஆசிய கோப்பை போட்டிகளை காரணம் காட்டி நியூசிலாந்து தொடரில் போட்டிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, தலா இரண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் போதும் என, இந்தியா தெரிவித்தது. இதுகுறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
இருப்பினும், இந்திய அணியின் நியூசிலாந்து பயணம் அதிகமான வருமானத்தை பெற்றுத்தரும் என்பதால், இந்தியாவின் முடிவுக்காக, நியூசிலாந்து காத்திருப்பதாக தெரிகிறது.
இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைமை அதிகாரி டேவிட் ஒயிட் கூறுகையில்,
" இந்தியா தொடர் குறித்து இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையுடன் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது உண்மை தான். அடுத்த சில வாரங்களில் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியாகும் என்று நம்புகிறோம்,'' என்றார்.
0 comments:
Post a Comment