
மெஸ்கோவில் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 4 தர 400 மீற்றர் அஞ்சலோட்ட தூரத்தை 37.36 செக்கன்களில் பூர்த்தி செய்த ஜமைக்கா அணியினர் முதலிடத்தைப் பெற்றனர்.
இந்த அணியில் இடம்பெற்ற உசைய்ன் போல்ட், தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளதுடன், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
26 வயதான உசைய்ன் போல்ட் ஏற்கனவே 100 மற்றும் 200 மீற்றர் ஒட்டங்களில் தங்கப்பதக்கத்தை வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்பிரகாரம் உலக மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் எட்டுத் தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 10 பதக்கங்களை அவர் சுவீகரித்துள்ளார்.
0 comments:
Post a Comment