Monday, August 12, 2013

பிரான்சில் அதிக அளவில் உற்பத்தியாகும் முட்டைகளின் விலையை உயர்த்த வலியுறுத்தும் போராட்டத்தில் தினமும் சுமார் 1,00,000 முட்டைகள் சாலைகளில் போட்டு உடைக்கபடுகின்றன.

பிரான்சில் கடந்த சில மாதங்களாக உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு ஏற்ப விலையை அதிகரிக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், விவாசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்கப்படாததால், அவர்கள் ஒரு நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதன்படி, முட்டையின் விலையை அதிகரிக்கும் வரை தினமும் சுமார் 1,00,000 முட்டைகளை சாலைகளில் போட்டு உடைக்க முடிவு செய்தனர்.

போராட்டத்தின் ஒரு கட்டமாக கார்ஹெயிக்ஸ் புலோகர் என்ற இடத்தில் உள்ள அரசு வரி அலுவலகத்தின் முன் திரண்ட விவசாயிகள் சுமார் 2 லட்சம் முட்டைகளை கீழே போட்டு உடைத்தனர்.

இது தொடர்பாக கூறிய விவசாயி ஒருவர், அளவிற்கு அதிகமான முட்டை உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதிகளவில் முட்டைகள் கிடைக்கின்றன. இதனால் முட்டை விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பராமரிப்புக்கு ஆகும் செலவைக்கூட எங்களால் முட்டை வியாபாரத்தின் மூலம் பெற இயலுவதில்லை எனக் கவலை தெரிவித்தார்.

 
Posted by V4Tamil .com on 9:17 PM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search