அவுஸ்ரேரியாவில் 2013 ஆண்டு நடைபெறவுள்ள கொமன் வெல்த் போட்டிகளுக்காக கனிஸ்ட வீரர்களை தெரிவு செய்து பயிற்சியளிப்பதற்க்காக இலங்கையின் முன்னாள் குறுந் துார ஓட்ட வீராங்கனையும், விளையாட்டுத்துறை அமைச்சினுடைய செயலாளருமான சுசந்திக்கா ஜெயசிங்க யாழ்ப்பாணம் வந்துள்ளார்.வடக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 25 வீரர்களுக்கு சுசந்திக்காவினால் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்த பயிற்சிகள் இன்றும் நாளையும் துரைப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் என, வட மாகாண பிரதி கல்வி பணிப்பாளர் கே. சத்தியபாலன் தெரிவித்தார்.
இந்த பயிற்சி முகாமில் சிறப்பாக செயற்ப்படுகின்ற வீரர்கள் தேசிய பயிற்சி முகாமில் இணைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment