
இறுதிச்சுற்றில் உலகின் தலைசிறந்த 8 வீரர்கள் பலப்பரீட்சையில் இறங்கினர். கோடிக்கணக்கான ரசிகர்களின் பார்வை உலகின் அதிவேக வீரரான போல்டின் மீதே இருந்தது.
மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த உசேன் போல்டுக்கு யாரும் ஈடுகொடுக்க முடியவில்லை. பாதி தூரத்திற்கு பிறகு தனி ஒருவராக முன்னிலை பெற்று 19.66 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கபதக்கத்தை முத்தமிட்டார்.
உலக தடகள போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் அவர் தங்க பதக்கம் வெல்வது இது 3வது முறையாகும். ஜமைக்காவின் வாரன் வெய்ர் 19.79 வினாடிகளில் வந்து வெள்ளி பதக்கத்தையும், அமெரிக்காவின் கார்டிஸ் மிட்செல் 20.04 வினாடி களில் கடந்து வெண்கல பதக்கமும் வென்றனர்.
26 வயதான உசேன்போல்ட் ஒட்டுமொத்த உலக தடகள போட்டிகளில் நேற்று வரை 7 தங்க பதக்கங்களை குவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் காரல் லூயிஸ், மைக்கேல் ஜான்சன், அலீசன் பெலிக்ஸ் ஆகியோர் 8 தங்க பதக்கங்கள் பெற்று வரலாற்று சாதனையாளர்களாக உள்ளனர். இந்த சாதனையாளர்கள் பட்டியலில் போல்ட் இடம்பிடிப்பாரா என்பது இன்று மாலை தெரியும்.
0 comments:
Post a Comment