"தலைவா" பட விவகாரம் தொடர்பாக சென்னையில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக் குழுவினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
நடிகர் விஜய் நடித்துள்ள "தலைவா" படம் கடந்த 9ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், படம் வெளியாவதற்கு முன்பே "தலைவா" வெளியாக இருந்த தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட படக்குழுவினர் கோடநாடு சென்றதாகவும், அவர்கள் வழியிலேயே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனிடையே, "தலைவா" படம் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் வெளியாகாவிட்டால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாவேன் என்றும், 'முதல்வர்' மனமிறங்கி படம் வெளிவர நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்றும் அப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், "தலைவா" படம் வெளியிட நடவடிக்கை எடுக்க கோரி படத்தின் இயக்குனர் விஜய், உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று மனு கொடுத்துள்ளார்.
அத்தோடு, இன்று ‘தலைவா’ படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் சென்னை காவல்துறை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
'தலைவா' திரைப்படம் கடந்த ஆக.9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகி இருந்தது. ஆனால் திரையரங்குகளுக்கு வந்த மொட்டை கடிதங்களாலும், தொலைபேசி மிரட்டல்களாலும் திரையரங்கு உரிமையாளர்கள் ‘தலைவா’ திரைப்படத்தினை வெளியிட மறுத்து வருகிறார்கள்.
இதனால் தமிழகத்தில் மட்டும் தடைசெய்யப்பட்டு திரைக்கு வெளிவராத சூழல் அமைந்துள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மிகுந்த பொருள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை தவிர உலகமெங்கும் வெளியான காரணத்தினால் ‘தலைவா’ திரைப்படம் அனுமதியின்றி இணையதளத்திலும், விசிடி வழியாகவும் தமிழகமெங்கும் புற்றீசல் போல பரவி உள்ளது.
தமிழகத்தில் ‘தலைவா’ திரைப்படம் வெளிவர பல வகையில் முயற்சித்தும் திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிடாத காரணத்தினால் ‘தலைவா’ படத்தில் நடித்த நடிகர் விஜய், சத்யராஜ், அமலாபால் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இயக்குனர் விஜய், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் ‘தலைவா’ திரைப்படம் தமிழகத்தில் உடனடியாக வெளியாக வேண்டி ஆக.16 அல்லது 17 தேதிகளில் அரசு அனுமதி கொடுக்கும் இடத்தில் அடையாள உண்ணாவிரதம் இருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த உண்ணாவிரதத்தில் படக்குழுவினருக்கு ஆதரவாக ஏனைய கலைஞர்களும் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளததாக சென்னை திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Search
Popular Posts
-
Bunker and dictator Enver Hoxha's of Albania — During the nearly forty-year leadership of Communist dictator Enver Hoxha of the Peop...
-
2013ஆம் ஆண்டில் உலக கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 3.7 ட்ரில்லியன் டாலராகவும், பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து கொண்டிருப்பதாகவும்...
-
Yemen. North of Sana'a is a beautiful array of two Sahhar mountain (2306 m) and Mafluk (2215 m), and around - the green land of Wadi...
-
இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின்நேற்றைய போட்டிகளில் நோர்விச் சிட்டி, லிவர்பூல் அணிகள் வெற்றிபெற்றன. ஸ்ரோக் சிட்டி அணிக்கும...
-
கதை என்னவோ சின்னதாக இருந்தாலும், அதை எடுத்திருக்கும் விதம் நம்மை உட்கார வைக்கிறது. படம் தொடங்கி பத்தாவது நொடியில் கதை தொடங்கி விடுகிறது. மகன...
Powered by Blogger.
Blog Archive
-
▼
2013
(313)
-
▼
August
(29)
- மெட்ராஸ் கபே' படத்தை தடுக்க யாருக்கும் உரிமை கிடைய...
- வெற்றிகரமான வீரராக வரலாற்றில் பதிவானார் போல்ட்
- GSC கிண்ணத்தை சுவீகரித்தது மைக்கல் அணி
- தேசிய மெய்வல்லுநர் அணி பயிற்சிக்காக வடக்கிலிருந்து...
- யாழ்ப்பாணம் வரும் ரா அதிகாரி - இதுவே மெட்ராஸ் கஃபே...
- 14வது உலக தடகள போட்டிகள் - 200 மீட்டர் ஓட்டம் - உச...
- யாழில் மோட்டார் பந்தய போட்டி.
- நியூசிலாந்து செல்லுமா இந்தியா..?
- இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பம்
- இலங்கையின் நதீகா லக்மாலி இறுதிப் போட்டிக்கு தகுதி.
- நடிகர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் இன்று திடீர் மரணம்
- தலைவா படத்திற்காக விஜய் உண்ணாவிரதம்
- கயானா அமேசன் வாரியஸ் அணியில் லசித் மலிங்க
- பகலிரவு டெஸ்ற் போட்டியில் இலங்கை அணி..!
- வெற்றி யாருக்கு? - GSC கிண்ணத்துக்கான இறுதிப்போட்ட...
- நிபந்தனைகளின் அடிப்படையில் தலைவா படத்தை 23ம் திகதி...
- டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகின்றேன் - மரியன் பர்டோலி
- முன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் பொன்னுத்துரை கால...
- யாழ்ப்பாணத்தில்- சா்வதேச திரைப்பட விழா
- #CPL போட்டிகளில் மஹேல
- செல்வநாயகத்தை போன்றே விக்னேஸ்வரனும் ஒரு இனவாதி- எஸ...
- இன்று பிறந்தநாள் கொண்டாடும் அர்ஜுன்
- பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி
- யாழ் வீர்களுக்கு பயிற்சியளிக்கும் சுசந்திக்கா
- தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்படவுள்ளது
- இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தொடர்பு.
- ஸ்ருதியின் சம்பளம் ஒன்றரை கோடி
- தவறாக இயங்கியமை உறுதிசெய்யப்பட்டால் தொழிற்சாலை மூட...
- 2,00,000 முட்டைகளை தெருவில் போட்டு உடைத்த விவசாயிகள்.
-
▼
August
(29)
Advertising
Social Icons
Featured Posts
*
0 comments:
Post a Comment