
டிவிஷன் இரண்டின் சம்பியன்களான கஸ்டம்ஸ் யுனைட்டட் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை வெற்றி பெற்றது. போட்டியின் ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடிய நிலையில், முதல் அரைப்பகுதியில் இரண்டு அணிகளும் எந்தவொரு கோலையும் அடிக்கவில்லை. இரண்டாவது அரைப் பகுதியில் இலங்கையின் சத்துர குணரத்ன முதலாவது கோலினை அடித்ததுடன், இரண்டாவது கோலை மொஹமட் சமீர் அடித்து வெற்றியை உறுதி செய்தனர். தாய்லாந்தில் அடுத்து சில நாட்கள் தங்கியிருக்கும் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணி, தாய்லாந்து இராணுவ உதைபந்தாட்ட கழகம் மற்றும் 21 வயதுக்குட்பட்ட தாய்லாந்து தேசிய அணி ஆகியவற்றுடன் பயிற்சி போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளது. நேபாளத்தில் அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கவுள்ள SAFF சம்பியன்ஸிப் போட்டிகளில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் SAFF சம்பியன்ஸிப் போட்டிகளில் குழு A மற்றும் குழு B ஆகியவற்றில் கலந்து கொள்கின்றன.
0 comments:
Post a Comment