
அதன் பிறகு ஏனோ தமிழில் ஒரு படங்களில் மட்டும் நடித்த இவர் தெலுங்கு மற்றும் இந்தியில் கவனம் செலுத்தினார். அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது.
கடந்த மாதம் இந்தியில் ஸ்ருதி நடிப்பில் வெளியான டி டே மற்றும் ராமையா வஸ்தாவய்யா ஆகிய படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளன.
மேலும் தெலுங்கிலும் ஸ்ருதி நடித்த கப்பார் சிங்கைத் தொடர்ந்து அண்மையில் வெளியான பலுபு படமும் வெற்றிபெற்றுள்ளது. தெலுங்கு மற்றும் இந்தியில் ஸ்ருதிக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார்.
பலுபு படத்தில் ஸ்ருதியுடைய சம்பளம் ரூ.1 கோடி. தற்போது அந்த சம்பளத்திலிருந்து மேலும் அதிகரித்து இனிமுதல் சம்பளமாக ரூ.1.50 கோடி கேட்க போகிறாராம்.
0 comments:
Post a Comment