கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (17.08.2013) பிற்பகல் 1 மணியளவில் கழக தலைவர் க.மகிந்தன் தலைமையில் ஞானாசாரியார் கல்லுாரி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
5 பந்து பரிமாற்றங்களை கொண்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து வதிரி ஞான வைரவர் விளையாட்டுக் கழக அணியினர் மோதியிருந்தனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மைக்கல் விளையாட்டுக் கழக அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர். 05 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் மைக்கல் அணியினர் சகல விக்கெட்களையும் இழந்து 50 ஓட்டங்களை பெற்றனர்.அவ் அணிசார்பாக தினோஜன் 16 ஓட்டங்களையும் ரகு 09 ஓட்டங்களையும் அச்சுதன் 13 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.
பந்து விச்சில் பவன் 2 இலக்குகளயும் கிரி, சிந்துஜன் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஞானவைரவர் அணியினர் 4.2 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 33 ஓட்டங்களை பெற்றனர். அவ் அணிசார்பாக சிலோஜன் 11 ஓட்டங்களையும் நிதர்ஷன் 9 ஓட்டங்களையும் அருண் 7 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் தினோஜன் அச்சுதன் தலா 1 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்கள். 17 ஓட்டங்களால் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது மைக்கல் அணி. ஆட்ட நாயகனாக மைக்கல் அணியின் தினோஜனும். தொடரின் சிறந்த திறமைகளை வெளிப்படித்திய அணியாக வதிரி டைமன்ஸ் விளையாட்டுக்கழகமும் தெரிவு செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment