Saturday, August 17, 2013

fixtures-2013-14-premier-league-640x3602013/14 பருவ காலத்திற்கான இங்கிலாந்து பிரீமியர் லீக் உதைபந்தாட்ட போட்டித் தொடர் போட்டிகள் இன்று ஆரம்பிக்கின்றன.

இம்முறை  இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகளில் பங்குபற்றும் முன்னணி கழகங்களில் முகாமையாளர் மாற்றங்கள், வீரர் பரிமாற்றங்கள் என்பன நடந்துள்ள நிலையில் போட்டிகள்ஆரம்பிக்கின்றன.


கடந்த பருவகாலத்தின் சம்பியன்களான மன்செஸ்டர் யுனைட்டட் கழகம் இம்முறை புதிய முகாமையாளர் டேவிட் மோயேஸின் கீழ்  போட்டிகளில் கலந்து கொள்கின்றது.


அத்துடன், வெயன் ரூனியை வாங்குவதற்கான செல்சி கழகத்தின் முயற்சிகளும் தொடருகின்ற நிலையில், உபாதை காரணமாக ஆரம்பப் போட்டிகள் சிலவற்றில் வெய்ன் ரூனி கலந்து கொள்ள மாட்டார் என மன்செஸ்டர் யுனைட்டட் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதேவேளை, மீண்டுமொரு முறை சில வருடங்களின் பின்னர் செல்சி கழகத்தின் முகாமையாளர் பொறுப்பை ஜோசே மரினோ ஏற்றிருக்கும் நிலையில், செல்சி கழகம் மீதான எதிர்பார்ப்பு இம்முறை அதிகரித்துள்ளது.


இன்று நடைபெறவுள்ள போட்டிகள்:






































லிவர்பூல்எதிர்ஸ்டோக் சிட்டி
ஆர்சனல் எதிர்அஸ்டன் விலா
நோர்விச் எதிர்எவர்டன்
சன்டர்லான்ட்எதிர்ஃபுல்ஹாம்
வெஸ்ட்புரோம்எதிர்சௌதம்டன்
வெஸ்ட்ஹாம் யுனைட்டட்எதிர்கார்டிப்
சுவன்சியாஎதிர்மன்சஸ்டர் யுனைட்டட்

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search