யாழ் மோட்டார் பந்தயக் கொண்டாட்டம் 2013 என்ற மோட்டார் பந்தய போட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.இவ் பந்தய போட்டி, செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் நடத்தபடுமென அதன் ஏற்பாட்டுக்குழுவினர் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அறிவித்துள்ளனர்.இந்த போட்டியை இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுக்கள் சங்கம், இலங்கை மோட்டார் சைக்கிள் விளையாட்டுக்கள் சம்மேளனம் ஆகியவற்றின் அனுமதியுடன், மோட்டார் பந்தய அமைப்பு மற்றும் மோட்டார் பந்தய கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கோல்டன் மோட்டார் விளையாட்டுக் கழகம் நடாத்தவுள்ளது.இலங்கைப் பிரஜைகள் மற்றும் இலங்கையில் வசிக்கும் உரிமையைக் கொண்டுள்ளவர்கள் யாவரும் இந்த மோட்டார் பந்தய போட்டி நிகழ்வில் பங்குபற்ற முடியும். இதற்குரிய விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 23ம் திகதியில் இருந்து ஏற்றுக்கொள்ளபடுகின்றது என தெரிவித்தனர்..
மோட்டார் பந்தயப் போட்டியானது செப்பெரம்பர் 14ம் 15ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அத்துடன் யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்கான போட்டியாக சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டம் ஆகியன நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரதன் ஓட்டமானது, ஆண்களுக்குரிய மரதன் ஓட்டம் 22 கிலோ மீற்றரும், பெண்களுக்கான மரதன் ஓட்டம் 15 கிலோ மீற்றரும் நடைபெறவுள்ளது.ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டமானது 110 கிலோ மீற்றரும், பெண்களுக்கான சைக்கிள் ஓட்டமானது 35 கிலோ மீற்றர் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment