
கிரவுன்ஸ் நிறுவனம் முன்மொழிந்துள்ள கல்வி மற்றும் பயிற்சி அம்சங்கள் வெற்றிகரமாக இருந்தால் அதற்கு ஆதரவு வழங்கப்படும் என கிளார்க் இணக்கம் தெரிவித்துள்ளார்.
கிளார்க், தொழில் வாய்ப்புத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவார் என்றும் கல்வித் தூதுவராக இலங்கைக்கு விஜயம் செய்து வேலை தேடுபவர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்களுக்கு அதரவு வழங்குவார் எனவும் ஜேம்ஸ் பெக்கர்ஸ் க்ரவுன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 450 அறைகளைக் கொண்ட சூதாட்ட நிலையம் ஒன்றை அமைக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அது தொடர்பான சட்டமூலம் ஒன்றையும் பாராளுமன்றில் சமர்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த கெசினோ திட்டத்திற்கு பிரதான எதிர்கட்சி உள்ளிட்ட ஏனைய எதிர்கட்சிகள் மற்றும் மத பிரிவுகளும், ஆளும் கட்சியில் உள்ள கூட்டணி கட்சிகள் சிலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment