Friday, August 16, 2013

CRICKET-ICC-WORLD-T20-MATCH22-ENG-SRIதற்போது நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக இலங்கை அணியின் லசித் மலிங்க அழைக்கப்பட்டிருக்கின்றார்.

ஸிம்பாவே சுற்றுக்கு செல்லவிருக்கும் பாக்கிஸ்தான் அணியின் முகம்மட் ஹபீசுக்கு பதிலாகவே மலிங்க இத்தொடரில் கயானா அணிக்காக விளையாடவுள்ளார்.


கரீபியன் பிரிமீயர் லீக்கின் முதல் சுற்றுப் போட்டிகளின் இறுதிக்கட்டங்கள் அண்மிக்கும் நிலையில் கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் இலங்கை சார்பில் விளையாடும் மூன்றாவது வீரராக லசித் மலிங்க உள்ளார். ஏற்கனவே, கிறிஸ் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா அணிக்காக முத்தையா முரளிதரன் விளையாடி வருகின்றமையும், டினிடாட் அணிக்காக மஹேல ஜெயவர்த்தன அழைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search