Monday, August 12, 2013

வெலிவேரிய குடிநீர் பிரச்சினைக்கு காரணமென பிரதேசமக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தொழிற்சாலை தவறாக இயங்கியமை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டால், அந்த தொழிற்சாலை மூடப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலையின் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளை இன்றைய தினம் சந்தித்த ஜனாதிபதி, பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வருவதற்கு பல்வேறு தீர்வுகளை முன்வைத்ததாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் பொறுப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் குடிநீர் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொழிற்சாலை தவறாக இயங்கியமை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டால், அதனை மூடுவதற்கும், தொழிற்சாலை உரிய விதிமுறைகளுக்கு அமைய இயங்கினால், முதலீட்டு வலயத்தில் அதனை மீண்டும் அமைப்பதற்கு காலஅவகாசம் வழங்குவதற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக, ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search