
கரீபியன் பிரிமீயர் லீக்கின் முதல் சுற்றுப் போட்டிகளில் ஆறு போட்டிகள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், டிரினிடாட் அன்ட் டொபாக்கோ அணிக்கு இரண்டு போட்டிகளே உள்ளன. கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் இலங்கை சார்பில் விளையாடும் இரண்டாவது வீரராக மஹேல ஜயவர்த்தன உள்ளார்.
ஏற்கனவே, கிறிஸ் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா அணிக்காக முத்தையா முரளிதரன் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கரிபீயன் பிரீமியர் லீக் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வியடைந்த டிரினிடாட் அன்ட் டொபாக்கோ அணி, கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும், வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறுவதனை உறுதி செய்வதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில், டிரினிடாட் அன்ட் டொபாக்கோ அணியில் மஹேல ஜயவர்த்தன இணைகின்றார்
0 comments:
Post a Comment