வட மாகாணத்திலிருந்து 12 மெய்வல்லுநர் வீரர்கள் மேலதிக பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் 2018ஆம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் தேசிய மட்ட மெய்வல்லுநர் அணியினை தெரிவு செய்வதற்காக மா
காண ரீதியில் குறுந்தூர ஓட்ட வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்யும் நிகழ்ச்சித்திட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது
இது போன்ற நிகழ்வொன்று வட மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பாடசாலைக்கு இடையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற ஓட்ட வீராங்கனைகளுக்கான தெரிவு நிகழ்ச்சிகள் கடந்த 15ஆம் மற்றும் 16 ஆகிய திகதிகளில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்த தெரிவினை விளையாட்டு அமைச்சின் வளவாளராகிய சுசந்திகா ஜெயசிங்க மேற்கொண்டார். மேற்படி தெரிவு நிகழ்ச்சியில் வட மாகாணத்தைச் சேர்ந்த 20 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 12 பேர் தெரிவு செய்யப்பட்டு செப்டெம்பர் மாதம் 03ஆம் மற்றும் 04ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறும் மேலதிக பயிற்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவர்களுடைய பெயர் விபரங்கள் வளவாளர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி திணைக்கள பிரதி கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன் தெரிவித்துள்ளார். இதில் யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 10 பேரும், மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த 2 பேரும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment