
கல்வி அமைச்சினால் அகில இலங்கைப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடத்தப்படும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி வீராங்கனை ரி.டனுசிகா 19 வயதுப் பிரிவினருக்கான கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் 2.60 மீற்றர் உயரம் பாய்ந்து முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
இதேவேளை அளவெட்டி அருணோதயக் கல்லூரி வீராங்கனை கே.டிலக்ஷனா 19 வயதுப் பிரிவு கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 2.50 மீற்றர் உயரம் பாய்ந்து மூன்றாம் இ;த்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment