Saturday, November 30, 2013

பிரபல சினிமா நடன இயக்குனர் ரகுராம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69. நடன குடும்பத்தில் இருந்து வந்தவர் ரகுராம். அதன் வெளிப்பாடாக இவரும் சினிமாவில் நடன இயக்குனராக களம் இறங்கினார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடன இயக்குனராக சுமார் 1000 பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். சென்னை, மகாலிங்கபுரத்தில் தனது வீட்டில் வசித்து வந்த ரகுராமிற்கு  30ம் தேதி மதியம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பால் காலமானார்.


மறைந்த ரகுராமிற்கு கிரிஜா என்ற மனைவியும், காயத்ரி ரகுராம், சுஜா ரகுராம் என்ற இரு மகள்களும் உள்ளனர். கிரிஜாவும் நடன இயக்குனர் தான். இவர் பிரபல நடன இயக்குனர் கலாவின் சகோதரி ஆவார். மகள்கள் காயத்ரியும், சுஜாவும் நடன இயக்குநர்களாக உள்ளனர். இதில் காயத்ரி ரகுராம் சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.மறைந்த ரகுராமின் உடல் சென்னை, மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காயத்ரி ரகுராம், “வை ராஜா வை படத்தின்” பாடல் பிடிப்பிற்காக பாங்கொக் சென்றுள்ளார். தந்தை மறைவுக்கு குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் வந்த பிறகு, ரகுராமின் இறுதிசடங்கு திங்களன்று (Dec 2ம் தேதி ) நடைபெறுகிறது.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search