Saturday, November 30, 2013

சிம்புவுடனான காதல் செய்திகள் வெளியானபோது தனது திரைச்சந்தை ஆட்டம் கண்டு விடும் என்றுதான் பயந்தார் ஹன்சிகா. ஆனால், சிம்புவுடன் காதல் என்றதும், இதெல்லாம் எங்கே நிலைக்கப்போகிறது என்று நினைத்தது விட்டார்களோ என்னவோ, கோலிவுட்டில் ஹன்சிகாவுக்கு வழக்கம்போல் படம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, அரண்மனை படத்தில் இதுவரை நடித்திராத அளவுக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிப்பதால் தனது கதாநாயகி அந்தஸ்து இன்னும உயரப்போவதாக உற்சாகத்தில் இருக்கிறார் ஹன்சிகா. மேலும், திரையுலககில் நல்ல நிலையிருக்கும் இருக்கும் பல நாயகர்கள் தங்கள் படங்களுக்கு ஹன்சிகாவை தெரிவு செய்யுமாறு வெளிப்படையாகவே கூறி வருவதால், தனக்கான மவுசு குண்டு மணி அளவுகூட குறையவில்லை என்று நினைக்கிறாராம் ஹன்சிகா.


அதனால், யாராது காதல் கல்யாணம் பற்றி பேச்செடுத்தால், இப்போது அதைப்பற்றி யோசிக்கவே எனக்கு நேரமில்லை. எனது முழு கவனமும் நடிப்பு மீதுதான் உள்ளது என்கிறாராம். அதோடு, எப்போது வேண்டுமானாலும், காதல் வரும், எப்போது வேண்டுமானாலும் கல்யாணம் செய்து கொள்ளலாம். ஆனால், சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு என்பது இப்போது மட்டும்தான் கிடைக்கும். அதனால்,. மனசை அலைய விடாமல், இப்போதைக்கு இதைப்பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும். அதை விடுத்து காதல் கல்யாணம் என்று தன்னை மறந்து சுற்றிக்கொண்டிருந்தால், வாழ்க்கையை அமைக்க முடியாது என்று அடுத்த கேள்வி சிம்புவைப்பற்றி அவர்கள் கேட்பதற்கு முன்னமே எதிர்கேள்வி கேட்காமல் இருக்க முற்றுப்புள்ளி வைத்து விடுகிறாராம் ஹன்சிகா.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search