
நியூஸிலாந்து அணியுடனான இரண்டாவது இருபது20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
பல்லேகலயில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்களைப் பெற்றது.
லூகே ரொன்சி 34 ஓட்டங்களையும் அன்டன் டேவ்சிச் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் திலகரட்ன டில்ஷான் 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும் குசல் பெரேரா 37 பந்துகளில் 57 ஓட்டங்களையும்பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். குமார் சங்கக்கார 17 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களைப் பெற்றார். இப்போட்டியின ஆட்டநாயகனாக குசல் பெரேரா தெரிவானார்.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=3067#sthash.Y8632weU.dpuf
0 comments:
Post a Comment