
உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் நடப்புச் சம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை நோர்வேயைச் சேர்ந்த 22 வயதான மெக்னஸ் கார்ல்ஸன் தோற்கடித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற 12 சுற்றுகள் கொண்ட உலக செஸ் சம்பியன்ஷிப் தொடரில் இன்று வெள்ளிக்கிழமை 10 ஆவது சுற்றின் முடிவில் 6.5: 3.5 விகிதத்தில் கார்ல்ஸன் வெற்றி பெற்றார்.
இந்த 10 சுற்றுகளில் கார்ல்ஸன் 3 சுற்றுகளில் வென்றார். 7 சுற்றுகள் வெற்றிதோல்வியின்றி முடிவுற்றதால் கார்ல்ஸன் புதிய உலக சம்பியனானார்.
இதன் மூலம் உலக செஸ் சம்பியன் பட்டத்தை வென்ற இரண்டாவது மிக இளம் வீரர் எனும் பெருமையையும் கார்ஸன் பெற்றுள்ளார். ரஷ்ய வீரர் கெரி கஸ்பரோவும் 1985 ஆம் ஆண்டு தனது 22 வயதில் சம்பியனாகியமை உலக சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment