Tuesday, November 26, 2013

இந்திய-மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான தீர்க்கமான ஒரு நாள் போட்டி இன்று கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் இடம்பெற்று வருகிறது.




கொச்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று முன்னிலை பெற்றது. விசாகப்பட்டணத்தில் இடம்பெற்ற 2ஆவது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி போராடி வென்றது.


இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, இறுதி ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகின்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத் தடுப்பை தேர்வு செய்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.


தற்போது மதியவேளைக்காக ஆட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 264 என்ற ஓட்ட எண்ணிக்கை மேற்கிந்தியத் தீவுகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Posted by V4Tamil .com on 11:09 PM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search