Saturday, November 16, 2013






2014ஆம் ஆண்டு பொங்கல் ரேஸில் அஜித்தின் வீரம் மற்றும் விஜயின் ஜில்லா படங்கள் மோதும் எனக் கூறப்பட்டு வந்தது.

 

இந்நிலையில், ரஜினியின் முப்பரிமாணத் திரைப்படமான கோச்சடையான் பொங்கலுக்கு திரைக்குவருமென அறிவிக்கப்பட்டது.

 

அதிக திரையரங்கில் வெளியிட்டு இலாபம் சம்பாதிப்பதே தற்போதைய கொலிவூட் படங்களின் பாணியாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டிலுள்ள சுமார் 900 திரையரங்குகளிலும் கோச்சடையான வெளிவருமென கூறப்பட்டது.

 

இந்த தீபாவளிக்கு வெளியான படங்கள் திரையரங்குகளை கைப்பற்ற பெரும் போட்டி நிலவியமை குறிப்பிடத்தக்கது. இதனால் கோச்சடையான் தவிர ஏனைய படங்களில் பொங்கலுக்கு ஒதுங்கிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அஜித்தின் வீரம் வெளிவருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் விஜயின் ஜில்லா வெளியாவது இதுவரையில் உறுதிசெய்யப்படவில்லை. பெரும்பாலும் இப்படம் ஒதுங்கிக்கொள்ளும் எனக் கூறப்டுகிறது. சச்சின் தந்த பாடமாக இருக்கலாம்.

 

இதேவேளை தமிழ்சினிமாவின் முன்னணி நாயகர்களின் திரைப்படங்கள் ஒன்றாக வெளிவந்தால் வசூல் நிலைமைகள் பாதிக்கப்படலாம் என திரையரங்க உரிமையாளர்கள் கருதுகின்றனராம்.

 

இருப்பினும் இந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி ரஜினி மற்றும் ஓப்பனிங்க கிங் அஜித் ஆகியோரின் படங்கள் ஒன்றாக திரைக்குவரவுள்ளதாக தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பொங்கல் ரேஸில் யார் வெற்றிபெறுவார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

 



 
Posted by V4Tamil .com on 7:31 AM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search