
க்ரிஷ் வரிசையின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது அந்தப் படங்களில் குழந்தைகளை மிகவும் கவர்ந்த ஜாதூ கதாபாத்திரத்தை இதில் ராகேஷ் ரோஷன் சேர்க்கவில்லை. ஆயினும், இந்தப் படம் பரவலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை ஒப்பிடும்போது சினிமாவை புத்திசாலித்தனமாக சித்தரிப்பதுவே வேகமாக மாறிவரும் காலகட்டங்களில் மக்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் என்று தெரிகின்றது. தங்கள்பெற்றோர்களுடன் வந்து இந்த திரைப்படத்தை ஒரு குடும்ப நிகழ்ச்சியாக மாற்றிய குழந்தைகளுக்கே ராகேஷ் ரோஷன் நன்றி சொல்ல வேண்டும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'க்ரிஷ்-3' புதிய சாதனைகளையும் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment