கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்திய சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இதேபோல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கும் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், வாழ்த்துக்களும் தெரிவித்து வரும் நிலையில், விருதுக்கு தேர்வு செய்தது தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது.
சச்சினுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் கனகசபை என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.அவர் தாக்கல் செய்த மனுவில், சச்சின் மற்றும் சி.என்.ஆர். ராவ் ஆகியோர் பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்ததில், விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என புகார் கூறியிருந்தார்.
0 comments:
Post a Comment