
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 117 ஓட்டங்களை; பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டது.
இடைநிறுத்தப்பட்ட ஆட்டம் டக்வோர்த்லூயிஸ் முறைப்படி 23 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. இதன்படி இலங்கை அணி 23 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. சங்கக்கார 71 ஓட்டங்களையும் டில்ஷான் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.
நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களில் கைல் மிலஸ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
தொடர்ந்து 23 ஓவர்களில் 198 ஓட்டங்கள் என்ற பாரிய இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி இறுதி ஓவரில் 6 விக்கெட்களால் த்ரில் வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து அணி 23 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 203 ஒட்டங்களைப்பெற்றது. இறுதி ஓவரில் 24 ஓட்டங்கள் தேவைப்பட அதிரடியாக துடுப்பெடுத்தாடிய நதன் மெக்கலம் 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 3 பௌண்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்களைப் பெற்றார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான லதம் 86 ஓட்டங்கைளையும் ரொன்சி 49 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் குலசேகர 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக லதம் தெரிவானார். தொடரின் 3ஆவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.
0 comments:
Post a Comment