Monday, December 2, 2013

தென் ஆப்ரிக்காவுடன் முதலில் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ளது, இந்திய வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும் என்று கேப்டன் டோனி கூறியுள்ளார்.

Tamil-Daily-News_38489496708

தென் ஆப்ரிக்கா புறப்படும் முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது குறித்து கூறியதாவது: வெளிநாட்டு தொடர் எப்போதுமே சவால் மிகுந்ததாக இருக்கும். சச்சின் போன்ற மகத்தான வீரர் இல்லாமல் டெஸ்ட் தொடரை சந்திக்க உள்ளோம். எல்லாவற்றுக்குமே ஒரு புதிய ஆரம்பம் இருக்கும். இளம் வீரர்களுக்கு இந்த தொடர் நல்ல அனுபவமாக அமையும்.

முதலில் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ளது, எங்கள் வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும் என நம்புகிறேன். ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி, அதே உற்சாகத்துடன் டெஸ்ட் தொடரை எதிர்கொள்வோம். அணியில் தற்போது 3வது தொடக்க வீரர் இல்லை என்றாலும், அந்த இடத்துக்கு கவுதம் கம்பீர் மிகவும் பொருத்தமானவராக இருப்பார். தவான், விஜய் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

Posted by V4Tamil .com on 2:28 AM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search