Wednesday, November 27, 2013

அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிகெட் அணியின் தலைவர் மைக்கல் கிளார்க்குக்கு அவரின் போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

 


இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் அண்டர்சனை அவதூறாகத் திட்டியமையே இதற்குக் காரணம்.பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின்போது, அண்டர்சனை மைக்கல் கிளார்க் தாகாத வார்த்தைகளால் திட்டியதாக முறைப்பாடு செய்யப்பட்டது.

அவர் வீரர்களுக்கான ஒழுக்கக் கோவையின் 2.1.4 ஆவது பிரிவை மீறியுள்ளதாக இப்போட்டியின் நடுவர்களாகப் பணியாற்றிய இலங்கையின் குமார் தர்மசேன, மூன்றாவது நடுவர் மரையஸ் எராஸ்மஸ் ஆகியோர் குற்றச்சாட்டை பதிவு செய்தனர். நேற்றுமுன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது இக்குற்றச்சாட்டை மைக்கல் கிளார்க் ஏற்றுக்கொண்டார். அதையடுத்து போட்டி மத்தியஸ்தரான ஜெவ் குரோவ் 20 சதவீத அபராதம் விதித்தார்.

இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) விடுத்த அறிக்கையில், 'இங்கிலாந்தின் அண்டர்சனை நோக்கி மைக்கல் கிளார்க், தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார். அது ஸ்டம்ப்பில் இருந்த ஒலிவாங்கி மூலமும் (மைக்) கேட்கப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் பிரிஸ்பேன் ஆடுகளத்தில் கூறியதைவிட மோசமான வார்த்தைப் பிரயோகங்களை செவிமெடுத்துள்ளதாக இப்போட்டியின் பின்னர் மைக்கல் கிளார்க் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Posted by V4Tamil .com on 1:46 AM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search