இந்த நிலையில் இங்கிலாந்தில் கால்பந்து போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இங்கிலாந்தில் நடந்த கிளப்புகள் இடையேயான லிக் போட்டியில் சூதாட்டம் நடந்து இருப்பதை தேசிய குற்ற தடுப்பு ஏஜென்சி கண்டுபிடித்தனர். 3 வீரர்கள் உள்பட 6 பேர் இதில் ஈடுபட்டனர்.
இதில் ஒருவர் முன்னாள் பிரிமீயர் லீக் போட்டி வீரர் ஆவார். இவர் ஏஜென்டாக செயல்பட்டு உள்ளார். இவர்கள் சிங்கப்பூரை சேர்ந்த புக்கியிடம் ஆட்டம் குறித்து தகவல்களை பரிமாறி கொண்டுள்ளனர். இதற்காக பேரம் பேசப்பட்டது.
இவர்கள் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்து உள்ளது. இதனால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்ற தடுப்பு ஏஜென்சி கூறி உள்ளது.கால்பந்து அசோஷியேசன் மற்றும் சூதாட்டம் கமிஷன் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய குற்ற தடுப்பு ஏஜென்சி இந்த சூதாட்டத்தை கண்டுபிடித்து உள்ளது. இது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 comments:
Post a Comment