Monday, November 18, 2013



பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் திடீர் கண்ணையா 76ஆவது வயதில் நேற்று சென்னையில் காலமானார்.

 

நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த 'திடீர்' கண்ணையா நேற்று மரணமடைந்தார்.

 

தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார்.

 

'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான திடீர் கண்ணையா இதுவரை 500இற்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

 

நாடகத் துறையில் இருந்தபோது அதில் வரும் திருப்புமுனை காட்சிகளில் கண்ணையா தோன்றுவதாக காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இதனாலேயே அவர் 'திடீர்' கண்ணையா என அழைக்கப்பட்டார்.

 

அயனாவரம் சக்ரவர்த்தி நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு இன்று காலை இடம்பெற்றது.

 
Posted by V4Tamil .com on 6:31 AM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search