
இந்நிலையில், தற்போது தமிழில் ஒரு படத்தில் மதுபாலா நடிக்கவிருக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தமிழுக்கு அறிமுகமாகும் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தில் மதுபாலா நடிக்கிறார்.
இப்படத்தை ‘காதலில் சொதுப்புவது எப்படி’ என்ற படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். நஸ்ரியாவின் உறவினராக, ஒரு எழுத்தாளர் கதாபாத்திரத்தில் மதுபாலா நடிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மதுபாலா நடிக்கும் இந்த படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒய்நாட் ஸ்டுடியோ சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார். 19-ந் தேதி நடக்கும் நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் மதுபாலா கலந்துகொள்கிறார்.
0 comments:
Post a Comment