Saturday, November 30, 2013

அடுத்த உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், பலவீனமான பந்துவீச்சு காரணமாக இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படும் என்று இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளார்.

Arjuna-Ranatunga-PTI

 இது குறித்து மும்பையில் நேற்று அவர் கூறியதாவது: இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிக வலுவாக அமைந்துள்ளது. ஆனால், உலக கோப்பையை மீண்டும் வெல்லும் அளவுக்கு அந்த அணியின் பந்துவீச்சு வலுவாக உள்ளதா என்பது தெரியவில்லை. இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.


 ரோகித் ஷர்மா மிக திறமையான வீரர். சில ஆண்டுகளுக்கு முன்பாக அவரது ஆட்டத்தை பார்த்தபோதே, இவர் ஏன் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்று ஆச்சரியப்பட்டேன். அந்த அளவு அவரது ஆட்டம் என்னை கவர்ந்தது. அதே போல விராத் கோஹ்லியும் திறமை வாய்ந்தவர். இடது கை ஆட்டக்காரர் ஷிகார் தவானின் வருகையால் இந்திய பேட்டிங் மேலும் வலுவாகி உள்ளது.


 அதே சமயம் பந்துவீச்சு பலவீனமாகி வருகிறது. உள்ளூரில் வெற்றி பெறுவது பெரிய விஷயம் இல்லை. வெளிநாட்டு மைதானங்களில் வெற்றிகளைக் குவிப்பதே மிகவும் முக்கியம். தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய போன்ற அணிகளுக்கு எதிராக அவர்கள் மண்ணில் சிறப்பாக விளையாடினால் தான் உண்மையான திறமை என்ன என்பது தெரியவரும்.


 தற்போது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தாலும் பேட்டிங் அவ்வளவு திருப்தியாக இல்லாததால், அந்த அணியால் உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சாதிப்பது கடினம். இவ்வாறு ரணதுங்கா கூறியுள்ளார்.

Posted by V4Tamil .com on 3:00 AM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search