சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் யுனிசெவ் அமைப்பின் தெற்காசிய பிராந்தியத்துக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
40 வயதான சச்சின் டெண்டுல்கர் யுனிசெவ் தூதுவராக நியமிக்கப்பட்டமை குறித்து மும்பையில் இன்று நடைபெற்ற பைவமொன்றில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
யுனிசெவ் அமைப்பின் தெற்காசிய பணிப்பாளரான டாக்டர் கரீன் ஹல்ஷோப்பும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளின் சுகாதார விழிப்புணர்வு செயற்றிட்டங்களிலும் பிரசாரங்களிலும் டெண்டுல்கர் ஈடுபடவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய சச்சின் டெண்டுல்கர், தனது வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸ் இதுவெனக் கூறினார். 'யுனிசெவ் தூதுவராக என்னால் முடிந்தளவு சிறப்பாக செயற்படுவதற்கு நான் எதிர்பார்க்கிறேன்' என அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment