• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Monday, December 16, 2013

13-aamir-khan-k-balachander-600

சென்னையில் நடந்து வரும் 11வது சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைக்க அவரது சொந்த செலவில் சென்னை வந்திருந்த இந்தி இளம் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நேற்று தமிழ் நாட்டின் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் இருவரும் சினிமாவின் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள்.

அமீர்கானின் சத்யமே ஜெயதேவ் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றியும், அவரது கஜினி, 3 இடியட்ஸ், தூம் 3 படங்கள் பற்றியும் பாலச்சந்தர் பாராட்டி பேசினார். பாலச்சந்தரின் பல படங்கள் பற்றி அமீர்கான் சிலாகித்து பேசினார். தமிழில் பாலச்சந்தர் இயக்கிய படங்களை இந்தியில் ரீமேக் செய்வது பற்றியும் அமீர்கான் பாலச்சந்தருடன் பேசியதாக தெரிகிறது.
இன்றைக்குள்ள சூழ்நிலையில் உன்னால் முடியும் தம்பியை இந்தியில் ரீமேக் செய்து அதில் கமல் நடித்த கேரக்டரில் அமீர்கான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பாலச்சந்தர் அவரிடம் கருத்து சொன்னதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரிசீலிப்பதாகவும் அமீர்கான் தெரிவித்துள்ளார். வருகிற 19ம் தேதி நடக்க இருக்கும் தூம் 3யின் பிரிமியர் ஷோவுக்கு வருமாறு கே.பாலச்சந்தருக்கு அமீர்கான் அழைப்பு விடுத்துள்ளார்.

Wednesday, December 4, 2013

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசனின் ஜோதிடர் அணியின் தலைவர் டோனிக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கி வந்துள்ளார். விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் சில மூடப் பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் ஒவ்வொரு போட்டிக்கும் முன்பும் மாமியார், மருமகள் சம்பந்தப்பட்ட தொலைக்காட்ட்சித் தொடர் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இலங்கை பந்து வீச்சாளர் மலிங்கா ஒரு போட்டியில் பந்தை குறைந்தது 50 முறையாவது முத்தமிடுவார். இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் ஜோதிடர் வெங்கடேசன் கார்த்திகேயன் தலைவர் டோனிக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.


IN22_DHONI_1185838fசென்னை அணி வீரர்களின் உடைமாற்றும் அறையில் குறிப்பிட்ட சுவர்களில் குறிப்பிட்ட சில தெய்வங்களின் புகைப்படங்களை மாட்டி வைக்க ஜோதிடர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அவர் கூறியவாறே செய்துள்ளார்களாம்.சென்னை அணி விளையாடும் போது அணி நிர்வாகத்தினர் நீல நிற டி-சர்ட் அணிய வேண்டும், எதிர் அணியினருக்கு சிவப்பு நிற துண்டுகள் கொடுக்க வேண்டும் என்று வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


ஐபிஎல் சூதில் சிக்கி கைதான குருநாத் மெய்யப்பனை சென்னை அணி விளையாடிய இரண்டு போட்டிகளை நேரிலோ அல்லது தொலைகாட்சியிலோ, கணினியிலோ பார்க்கவே கூடாது என்று ஜோதிடர் தெரிவித்துள்ளார். மெய்யப்பனும் அவ்வாறே நடந்துள்ளார். அவர் பார்க்காத 2 போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றது. 2010ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது சென்னை அணி இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தரம்சாலாவில் இருந்து காலிறுதி போட்டி நடக்கும் மும்பைக்கு செல்வதற்கு பதில் சென்னை வந்துள்ளது. காரணம் அன்றைய தினம் மும்பைக்கு செல்ல நல்ல தினம் இல்லையாம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் டோனி தான் ஜோதிடரின் அறிவுரையை நாடினாராம்.

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search