• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Showing posts with label தனுஷ். Show all posts
Showing posts with label தனுஷ். Show all posts

Monday, December 30, 2013

dhanu


ராஞ்ச்னாவின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த இந்திப் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். பால்கி இயக்கும் இப்படத்தில் தனுஷின் ஜோடி கமலின் இளைய மகள் அக்‌ஷராஹாசன்.மேலும், இப்படத்தில் தனுஷுடன் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பும் நடிக்கிறார்.காதல் கதைகளை உணர்ச்சிப் பூர்வமாக தரும் பால்கியின் இப்படமும் காதலை அடிப்படையாகக் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்.மேலும் இப்படத்தில் வாய் பேச முடியாத இளைஞராக தனுஷ் நடிப்பதாகவும், மிகச் சிறந்த நடிகனாக வேண்டும் என கனவு காணும் தனுஷிற்கு நடிகர் அமிதாப் உதவுவதாகவும் கதையோட்டம் செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thursday, December 26, 2013

இயக்குனர் வெற்றிமாறன் படங்களுக்கும், தனுஷ் படங்களுக்கும் ஆஸ்த்தான ஒளிப்பதிவாளராக இருந்து வருபவர் வேல்ராஜ். இவர் இயக்குனராக வேண்டும் என்கிற நீண்ட நாளைய கனவு, தனுஷ் மூலமே நிறைவேறியிருக்கிறது.


dhanush


வேல்ராஜ் தனுஷிடம் சொன்ன ஒரு கதை பிடித்துப் போக, தனது சொந்த நிறுவனமான தனுஷ் வோண்டர் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிக்க முன் வந்திருக்கிறார். படத்துக்கு வேலையில்லா பட்டதாரி என பெயரிட்டுள்ளனர்.


இந்தப் படத்தில் முதன் முறையாக தனுஷுடன் ஜோடி சேருபவர் நடிகை அமலாபால். பொல்லாதவன் படத்தையடுத்து இந்தப் படத்துக்காகவும் சிக்ஸ்பேக் வைத்து நடிக்கவுள்ளார்.


அத்தோடு, வேலையில்லா பட்டதாரி... தொட்டுப் பாத்தா ஷாக்கடிக்கும் வேற மாதிரி என்ற ஒரு பாடலையும் எழுதி அசத்தியிருக்கிறார் தனுஷ்.

Wednesday, December 4, 2013

சும்மா மேடைக்காக கட்டிப் பிடிக்கிறாங்க, நண்பேன்டா சொல்லிக்கிறாங்க என்ற அவப்பெயரை கூட்டாக துடைத்தெறிந்திருக்கிறார்கள் சிம்புவும், தனுஷும். உடன் மாப்பிள்ளை தோழன் மாதி‌ரி அனிருத்.தனுஷ் தனது பிறந்தநாளுக்கு இலண்டன் சென்று அனிருத் உள்ளிட்ட நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியது போல் சிம்பு, தனுஷ், அனிருத் மூவரும் ஒரு திடீர் சுற்றுலா அடித்திருக்கிறார்கள்.


பாண்டிரா‌ஜ், கௌதம் படம் என்ற வேலை நெருக்கடிகளுக்கு நடுவில் சின்ன இடைவெளி சிம்புக்கு கிடைத்தது. அனேகனில் நடித்துவந்த தனுஷுக்கும் அப்படியொரு இடைவெளி. தங்க கூண்டின் கதவு திறந்த மகிழ்ச்சியில் அனிருத்தையும் அழைத்துக் கொண்டு இலண்டன் பறந்திருக்கிறார்கள். ஒன்றாக சுற்றுலா செல்லும் அளவுக்கு சிம்பு, தனுஷ் நெருக்கமானவங்க என்று பேசிக்கிறாங்க.

Thursday, November 28, 2013

ராதிகாவின் ராடன் நிறுவனம் மலையாள சினிமா தயா‌ரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்து படங்கள் தயா‌ரித்து வருகிறது. லிஸ்டினின் மே‌ஜிக் ஃப்ரேம்ஸ் தயா‌ரித்த ட்ராபிஃக்தான் தமிழில் “சென்னையில் ஒருநாள்” படமானது. சப்பாகுருஸ் படம்தான் புலிவாலாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படங்களை ராடனும், மே‌ஜிக் ஃப்ரேம்ஸும் இணைந்து தயா‌ரித்தன , தயா‌ரிக்கின்றன. இதையடுத்து லிஸ்டனின் இன்னொரு மிகப்பெரிய வெற்றியான உஸ்தாத் ஹோட்டலை தமிழில் ‌மீள்தாயாரிப்பு செய்கிறார்கள். விக்ரம் பிரபு, துல்கர் சல்மான் நடித்த வேடத்தில் நடிக்க உள்ளார். திலகனின் வேடத்தில் யார் நடிப்பார்கள் என்பதுதான் கேள்வி.இவை தவிர தனுஷ் நடிக்கும் படத்தையும் ராடன் தயா‌ரிக்க உள்ளது. அது எந்தப் படம் என்ற தகவல் இல்லை.

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search