இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்குமிடையிலான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 4ஆவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.றாஞ்சியில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 295 ஓட்டங்களைப் பெற்றது.
5 ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டையும் 24 ஓட்டங்களுக்கு 2ஆவது விக்கெட்டையும் 32 ஓட்டங்களுக்கு 3ஆவது விக்கெட்டையும் இழந்தது. 4ஆவது விக்கெட்டுக்காக 39 ஓட்டங்கள் பகிரப்பட்டப்போதிலும், 4ஆவது விக்கெட்டை இழந்து அவ்வணி 71 ஓட்டங்களுடன் தடுமாறியது. ஆனால் கிளென் மக்ஸ்வெல், ஜோர்ஜ் பெய்லி இருவரும் சிறப்பாக ஆடி 153 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜோர்ஜ் பெய்லி 94 பந்துகளில் 98 ஓட்டங்களையும் கிளென் மக்ஸ்வெல் 77 பந்துகளில் 92 ஓட்டங்களையும் மிற்சல் ஜோன்சன் 31 பந்துகளில் 25 ஓட்டங்களையும் ஜேம்ஸ் ஃபோக்னர் 29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக மொஹமட் ஷமி 3 விக்கெட்டுக்களையும் வினய் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின் இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
2
96 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 27 ஓட்டங்களுடன் காணப்பட்டபோது மழை குறுக்கிட்டது. அதன் பின்னர் போட்டியைத் தொடர முடியாது போக, போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன்படி, 4 போட்டிகளின் நிறைவில் இத்தொடரில் அவுஸ்திரேலிய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Search
Popular Posts
-
Bunker and dictator Enver Hoxha's of Albania — During the nearly forty-year leadership of Communist dictator Enver Hoxha of the Peop...
-
2013ஆம் ஆண்டில் உலக கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 3.7 ட்ரில்லியன் டாலராகவும், பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து கொண்டிருப்பதாகவும்...
-
Yemen. North of Sana'a is a beautiful array of two Sahhar mountain (2306 m) and Mafluk (2215 m), and around - the green land of Wadi...
-
இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின்நேற்றைய போட்டிகளில் நோர்விச் சிட்டி, லிவர்பூல் அணிகள் வெற்றிபெற்றன. ஸ்ரோக் சிட்டி அணிக்கும...
-
கதை என்னவோ சின்னதாக இருந்தாலும், அதை எடுத்திருக்கும் விதம் நம்மை உட்கார வைக்கிறது. படம் தொடங்கி பத்தாவது நொடியில் கதை தொடங்கி விடுகிறது. மகன...
Powered by Blogger.
Blog Archive
-
▼
2013
(313)
-
▼
October
(31)
- ஆரம்பம் படத்தின் தோல்வியால் அஜித் ரசிகர் தற்கொலை?
- டெண்டுல்கரின் சாதனைகளை கோலி முறியடிப்பார்- கவாஸ்கர...
- கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி
- Land of the Giant Mushrooms - Albania's Cold War B...
- திரைப் பார்வை - "6 Candle "
- “ஜெயலலிதா அம்மா எனக்கு எம்.ஜி.ஆர். மாதிரிண்ணே!” - ...
- இலங்கை வரும் அணியில் மேக்கல்லம், டெய்லர் இல்லை
- நான் அதிஷ்டசாலி ஆசீர்வதிக்கப்பட்டவன்: நெகிழும் தனுஷ்
- உதட்டு முத்தம் G.V.P க்கு மனைவி தடை உத்தரவு
- சனத் ஜெயசூரியவிடம் இருந்து 2 ஆவது மனைவியும் விவாகர...
- பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாபிரிக்கா முழுமையான ஆதி...
- இந்திய, அவுஸ்திரேலிய ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது
- பின்னணிப் பாடகரான மன்னா டே இன்று காலமானார்.
- இலங்கை அணியின் புதிய பயிற்சியாளர் செப்பல்
- மெட்ராஸ் கஃபே' ஒரு பக்கத்தை மட்டுமே சொன்னது- கமல்
- இலங்கை கெசினோ முதலீட்டில் பெக்கர்ஸுடன் கரம் கோர்க...
- தோனி புதிய சாதனை
- விஜயின் அடங்காத அரசியல் ஆசை: தனிக்கட்சி அமைக்க முட...
- விருதை ஏற்க கமல் தயக்கம்
- ஆரம்பம் சிக்கல்: தடை கோரி வழக்கு
- சூர்யாவின் அதிரடி முடிவு...
- மணிலால் பெனாண்டோவிற்கு வாழ்நாள் தடை
- ''நையாண்டி'' படத்தை தடை செய்யக் கோருகிறார் நடிகை ந...
- தமிழ் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்
- சச்சினும், டிராவிட்டும் விடை பெற்றனர்!
- கமலின் பேய் படத்தை எடுப்பது யார்? – கமல் பதில்!
- சொதப்பிய சென்னை..........!
- ராஜா - ராணி ------- குடும்பத்தோடு ஒரு பார்வை
- றகர் அணிக்கு நாமல் தலைவராக தெரிவு
- மகாஜனாக் கல்லூரி வீராங்கனைக்கு தங்கப்பதக்கம்
- கன்சிகா தெரிவில் கடுப்பான திரிசா.....!
-
▼
October
(31)
Advertising
Social Icons
Featured Posts
*
0 comments:
Post a Comment