பிக்கி அமைப்பின் தலைவராக பொறுப்பு வகிக்கும் கமல்ஹாசன் அது தொடர்பான விழா பற்றிய அறிவிப்பிற்காக பெங்களூர் சென்றிருந்தார். அவரிடம் பல்வேறு கேள்விகளை மீடியாக்கள் கேட்க, எல்லாவற்றுக்கும் ஆணியடித்தாற் போல பதில் சொல்லியிருக்கிறார் அவர். அதில் முக்கியமான சில கேள்விகளும் அதற்கு அவர் சொன்ன பதில்களும் ‘ரொம்ம்ம்ம்ம்ப’ யோசிக்க வைக்கிற ரகம்.‘விஸ்வரூபம்’ படத்திற்கு சிக்கல் வந்த போது நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று நான் கோபத்தில் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்ள மாட்டேன். அது ஒரு பிள்ளை தன் தாய் மீது வைத்திருக்கும் அதீத அன்பின் வெளிப்பாடு. எனவே அந்த வார்த்தைகளை வேறு அர்த்தங்களில் புரிந்து கொள்வது அபத்தம். ஆனால் சிலர் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்பி படத்தை வெளியிட்டு வருகிறார்கள். நான் ஒருபோதும் சந்தைக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பதில்லை. ‘விஸ்வரூபம்’ படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் போல ‘தலைவா’ படத்திற்கும் ஏற்பட்டது. அது பற்றிய கேள்விகள் எல்லாம் துரத்துகிறது. அவற்றிற்கு நான் ஏன் கருத்து சொல்ல வேண்டும்?
அரசியல் என்பது சிறந்த சமூகத்தை கட்டமைக்கும் உன்னதமான கருவி. என்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை பேய் படங்கள் மட்டும்தான் எடுத்ததில்லை. மற்ற எல்லா வகையான படங்களும் எடுத்திருக்கிறேன். இனிமேலும் பேய் படம் எடுக்க மாட்டேன். அதைதானே அரசியலில் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள்?

0 comments:
Post a Comment