Sunday, October 27, 2013

llபாடகராகவும் புகழ் பெற்று வரும் நடிகர் தனுஷ், தான் அதிர்ஷ்டசாலி என தனது ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் அமலாபால் ஜோடியாக தனுஷ் நடித்து வரும் படம் வேலையில்லாத பட்டதாரி. இப்படம் தனுஷின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்திற்கு இசை அனிருத். இப்படத்திலும் தனுஷ் ஒரு மெலடிப் பாடல் பாடியுள்ளார். அப்பாடலில் இன்னும் ஓர் சிறப்பம்சம் என்னவென்றால், தனுஷூடன் அந்த மெலடி டூயட்டைப் பாடியது ஜானகியம்மா என்பது தான்.

கொலை வெறி பாடல் மூலம் உலகப் புகழ் அடைந்தார்கள் அனிருத்தும், தனுஷும். அப்பாடலிற்காக பிரதமர் மன்மோகன் சிங் தனுஷிற்கு விருந்தளித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வௌியான நைய்யாண்டி படத்திலும், டெடி பியர் என்ற பாடலைப் பாடியிருந்தார் தனுஷ்.

இந்நிலையில் உடல்நிலை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரை இசைப் பாடல்களைத் தவிர்த்து வந்த ஜானகியம்மா, இப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து மெலடிப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

ஜானகியம்மாவுடன் பாடல் பாடிய அனுபவம் குறித்து தனது ட்வீட்டரில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் தனுஷ், ‘எங்களுக்காக மீண்டும் பாட சம்மதித்ததற்கு ஜானகியம்மாவிற்கு வேலையில்லாத பட்டதாரி படக்குழுவினர் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி மற்றும் ஆசிர்வதிக்கப்பட்டவன், அதனால் தான் ஜானகியம்மாவுடன் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது´ எனத் தெரிவித்துள்ளார்.

Posted by V4Tamil .com on 9:47 PM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search