
ஆறாவது ஒரு நாள் போட்டியில், அவுஸ்திரேலியாவை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது இந்தியா.
இந்தியா மற்றும் ஆஸி. அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியில், 2,1 என்ற புள்ளிக்கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருந்தது.
மழை காரணமாக 4 மற்றும் 5வது போட்டிகள் கைவிடப்பட்டன. இந்நிலையில், 6வது ஒரு நாள் போட்டி, நாக்பூரில் நேற்று நடந்தது.
இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அவுஸ்திரேலியாவின் ஹூக்ஸ், பின்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இவர்கள் வந்த வேகத்திலேயே முறையே 13, 20 ஓட்டங்களில் வெளியேறினர்.
வாட்சனும், பாய்லேயும் அதிரடியாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை மளமளவென்று உயர்த்தினர். முகமது ஷமி பந்தில் வாட்சன் (102) போல்டானார்.
பாய்லே அதிரடி ஆட்டத்தின் மூலம், 156 ஓட்டங்களை விலாசினார். பின்வரிசையில் ஓக்ஸ் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களை எடுத்தார்.
50 ஓவர்கள் முடிவில் ஆஸி. 6 விக்கெட்டுக்களை இழந்து 350 ஓட்டங்களை குவித்தது.
இதையடுத்து, இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். சர்மா (79), தவான் (100) வெளியேற, பின்னர் வந்த ரெய்னா (16), யுவராஜ் (0) பெரிதாக சோபிக்கவில்லை.
ஆனாலும் கோஹ்லி அதிரடியாக ஆடி 66 பந்துகளில் 115 ஓட்டங்களை விலாசினார். தோனி 25 ஓட்டங்களை எடுத்தார்.
49.3 ஓவர்களிலேயே இந்தியா 4 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 351 ஓட்டங்களை எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலை சமன் செய்தது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக இந்திய அணியின் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டார்.
0 comments:
Post a Comment