
பிரபல பின்னணிப் பாடகரான மன்னா டே தனது 94ஆவது வயதில் பெங்களூரில் இன்று வியாழக்கிழமை காலமானார். சுகவீனமடைந்த இவர் பெங்களூரிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே காலமானார்.
இவரது சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டதுடன், இவர் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு வந்ததாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரபல பின்னணி பாடகர் பிரபோத் சந்திரா டே என அழைக்கப்படும் மன்னா டே இந்தி, பெங்காளி, அஸ்ஸாம் மொழி, மராத்தி, மலையாளம், கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, போஜ்புரி ஆகிய மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
0 comments:
Post a Comment